Sunday, January 7, 2007

அறிவியல் விதிகள்-குறளில்.

குறள் 1

ஆக்க அழிக்க இயலா ஆற்றல்
மாற்றலாம் மற்றொரு ஆற்றலாய்.

ஆற்றல் மாறா கோட்பாடு.
பொருள்:
ஆற்றலை ஆக்கவோ,அழிக்கவோ முடியாது.ஒருவகை ஆற்றலை பிரிதொரு வகை ஆற்றலாக மாற்ற மட்டுமே முடியும்.

ஆழ்பொருள் தத்துவம்:
ஆற்றலின் ஆதி எது ..? அந்தம் எது ..? இந்த பிரபஞ்சத்தின் முதன் முதல் ஆற்றல் எங்கிருந்து ஆரம்பித்தது..? ஆரம்பிக்கவோ , அழிக்கவோ இயலாது என்றால், ஆற்றல் தான்தோன்றியா..? ஆற்றலுக்கு கர்த்தா யாரும் இருக்க முடியாது. ஆறறல் ஒரு நிகழ்த்தும் சக்தி. அதுவே நிகழ் பொருள்(கருப்பொருள்) ஆகிறது. நிகழ்த்துவதும் அதுவே.! நிகழ்வதும் அதுவே.!. அது பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டு தொடர் பிரயாணம் செய்து கொண்டே இருக்கிறது. மாற்றம் மட்டுமே அதன் தொழில். ஆற்றலின் மாற்றம்தான் பிரபஞ்ச இயக்கம்..!

ஆற்றலின் எல்லை எது.? எல்லை எப்படி இருக்க முடியும்..? தொடர் பிறப்புகள் எடுத்து வரும் ஆற்றலின் பயணத்தில் நாம் காண்பது அணுவிலும் அணு. ஆனால் அணுவின் அணுவையும் ஆற்றல்தானே இயக்குகிறது..
ஆற்றல் ஒரு பருப்பொருளை இயக்குகிறது என்றால் , அந்த பருப்பொருளிலும் ஆற்றலே பொதிந்து (அக ஆற்றலாக) கிடக்கிறது. ஆற்றல் ஆற்றலை இயக்கி ஆற்றல் மாற்றம் ஆகிறது.
இந்த முடிவிலா நிகழ்வில் நீ யார்.? நான் யார்? நீ பிரபஞ்ச ஆற்றல் பயணத்தின் கண்ணுக்கு தெரியாத பகுதி..ஆனாலும் நீ ஆற்றலின் ஒரு அங்கம்.

வளர் சிதை மாற்றத்தில் நீ ஒவ்வொரு நொடியும் பழைய செல்களை உதிர்த்து புதிய செல்களை பெறுகிறாய். அப்படி என்றால் ஒவ்வொரு நொடியும் உன் உடல் புது பிறப்பு எடுக்கிறது.. ஆனாலும் அந்த புதிய செல்களையும் ஏதொ துகளின் மாற்றதில் இருந்தே பெற்று இருக்கிறாய்.
அப்படி என்றால் புதியது எது? பழையது எது..?

குவாண்டம் இயற்பியல் தத்துவப்படியும் அதுவே.! ஒரே பின்ன நொடியில் பிறத்தலும்,இறத்தலும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன..!ஆற்றல் பிறத்தலாகவும், இறத்தலாகவும் ஆகிறது.
பிறத்தலும், இறத்தலும் ஆற்றலின் தொடர்நிகழ்வு..இறத்தல் என்றால் ஆற்றலின் முடிவு அல்ல. அது பிறத்தலுக்கான தொடக்கம். பிறத்தல் என்றால் ஆரம்பம் அல்ல: அது இறத்தலின் தொடக்கம்.
முடிவும் தொடக்கமும் ஒரே புள்ளியில் இருக்கிறது. அதே புள்ளியே அடுத்த புள்ளியை தொடக்கி வைக்கிறது. அந்த புள்ளி அடுத்த புள்ளியை..! இப்படியே தொடர்ந்து அது வட்டம் ஆகிறது. மீண்டும் சுழல்கிறது..இந்த வட்டதில் எது தொடக்கம்.? எது முடிவு ..?
எது தொடக்கமோ அதுவே முடிவகவும், எது முடிவோ அதுவே தொடக்கமாகவும் இருந்தால்தானே அது வட்டம்.

இந்த பிரபஞ்ச த்த்துவம் வட்டவியல் தத்துவம்.








குறள் 2






No comments: