Sunday, January 14, 2007

நானோ தொழில் நுட்பம்.

நானோ தொழில் நுட்பம். ( மூர்த்தி சிறிது: கீர்த்தி பெரிது)


"அணுவை சத கூறிட்டால் அதன் பெயர் கோண்"-என்று கம்பன் தன் கற்பனையில் உவமை செய்தான். இன்றைய அறிவியல் தொழில் நுட்பம் அசாத்தியமான வளர்ச்சி கண்டு நம்மை பிரமிக்க வைக்கிறது.நானோ நுட்பம் என்பது ஒரு மில்லிமீட்டரை மில்லியன் பங்கு பகுத்தால் கிடைக்கும் மீநுண் அளவில் நிகழ்த்தும் தொழில்நுட்பம்.
தலைமுடியின் விட்டம்(Diametre) நானோ அளவீட்டில் 50000 மடங்கு பெரியது என்றால் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்து கொள்ளுங்கள்.நானோ என்ற கிரேக்க சொல்லுக்கு மிகநுண்ணிய என்று பொருள்.

நானோவின் பயன்பாட்டு பகுதிகள்:

(1)சூரிய மின்சிப்பம் (Solar cells),
(2) சுற்றுபுற நுட்பவியல் (Environmet Technology)
(3)தகவல் தொழில் நுட்பம் ( புதியவகை நினைவிகளை உருவாக்குவதில்-மற்றும் நூண்செயலிகளை(Micro Processor)
4. மருத்துவ துறையிலும்- இதன் பயன்பாடுகள் இருக்கும்.

நானோ என்பது பொதுவான வார்த்தை- இது பல்வேறுபட்ட பகுப்பாய்வுகளிலும்(Analysis), செயல்பாடுகளிலும் அதன் மூலப்பொருளின்(Materials) அளவைக் குறைப்பதாகும். அதிக நினைவுத்திறன், அளவு குறைவு -என்ற வகையில் வளர்ந்து வரும் இதைப் பற்றி விளக்குகிறேன்.

மூர்த்தி சிறிது: கீர்த்தி பெரிது என்பது நானோவிற்கு கச்சிதமாக பொருந்தும்.

1. நானோ மொபில். ( தானியங்கி வாகனம்)-(automobil)
2. நானோலக்ஸ். (ஒளிசார் தொழில் நுட்பம்(Optics)
3நானோ ஃபேப்.(மின்னணுவியல் -Eloctronics)
4.நானோ லைஃப் (Life Science)

(இது பற்றி இனி வரும் வாரங்களில் பார்க்கலாம்..- தொடர்வேன்...)



2 comments:

Unknown said...

நானோ என்ற கிரேக்க வார்த்தைக்கு "மிக நுண்ணிய" என்பது பொருள் என்று தெரிந்துகொண்டேன்.

"மூர்த்தி சிறியது கீர்த்தி பெரியது" - மிகப்பொருத்தமானது தான். பகுக்க பகுக்க அதன் வேகமும் திறனும் செறிவாய் இருப்பது வியப்பே!

கிறுக்கு வேலன் said...

ஸ்ரீராம்,

தங்களின் நனோ குறித்த கட்டுரை சிறப்பாக உள்ளது. நான் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்று, தற்போது இந்திய தொழிற்நுட்ப கழகம், சென்னையில் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளேன். ஒர் தமிழ் நாளிதழிற்காக, நனோ தொழிநுட்பம் குறித்து தமிழில் ஒர் க்ட்டுரை எழுதியுள்ளேன். அதன் முன்னுரை நீங்கள் எடுத்துகாட்டியுள்ள கம்பன் வரிகளை பயன்படுத்தியுள்ளேன். இது கம்பன் வரிகளாய் இருப்பினும், நானோ உடன் அதை இணைத்தது தாங்கள்தான். ஆகையால், எனது கட்டுரையில் பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்டு கொள்கிறேன். உங்கள் பெயரையும் கட்டுரை ஆசிரியர்கள் பட்டியலில் சேர்க்க முயற்சி செய்கிறேன். ஆகையால் தங்களது அனுமதியை oomvel@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

நன்றி

வேல்முருகன்